Home  |  மற்றவை

இன்று யாருடைய காதல் சக்சஸ் ஆகும்... யாருடைய காதல் சொதப்பும்? ஜோதிட சாஸ்திரம்

இன்று யாருடைய காதல் சக்சஸ் ஆகும்... யாருடைய காதல் சொதப்பும்?   ஜோதிட சாஸ்திரம்

 

இன்று காதலர் தினம். உலகமே கொண்டாடுகிறது. பரிசு 
பொருட்களையும் வாழ்த்துகளையும், அன்பு முத்தங்களையும் காதல் 
ஜோடிகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனித 
குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு 
கிரகங்களும் காரணமாக இருக்கின்றன.
லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து 
வைத்தாலும் அதை போற்றி பாதுகாக்காமல் பாதியில் ரத்து செய்து 
விட்டு போகும் நிலையும் இன்றைக்கு இருக்கிறது. என்னதான் தேடித் 
தேடி திருமணம் செய்து வைத்தாலும் புரிதல் இல்லாத வாழ்க்கை மண 
வாழ்க்கையில் தம்பதிகளிடையே கசப்பை ஏற்படுத்துகிறது.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் என்பது 
முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண 
பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை 
வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன 
அறிவுறுத்துகிறது என பார்க்கலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் 
ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே 
ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது 
தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? 
அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
குரு
ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக 
காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் 
ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று 
பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், 
அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.
சுக்கிரன்
இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், 
பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். ஆண், பெண் இருவரையும் 
கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான 
உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய 
சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.
செவ்வாய்
இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், 
வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக 
சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை 
உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், 
வேகத்தையும் தருபவர்.
புதன் - சந்திரன்
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு 
மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். 
ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் 
காரணம் இவரே. மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் 
திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக 
காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.
விவகாரமான சனி-சந்திரன்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி 
வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற 
அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக 
மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு 
மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் 
வயப்படுத்துவது எளிது. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் 
மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.
சுக்கிரன் - செவ்வாய்
ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக 
ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். 
விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே 
இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், 
செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. 
காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் 
தயங்கமாட்டார்களாம்.
காதலில் விழுவது யார்?
ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் 
இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, 
வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை 
பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் 
இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் 
அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம்
யார் பார்க்கலாம்
மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் 
இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, 
புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் 
நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். 
புதன், சனி ஆகிய தசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் 
இருக்கும்.
கற்பு நெறி தவறாத காதல்
இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் 
முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் 
காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு 
ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், 
நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி 
தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச 
கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் 
தேடி வரும்.
காதல் வாழ்க்கை சிறப்பு
ஏழாம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர 
ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி 
பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த 
இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் 
ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், 
நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் 
எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் 
காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் 
இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை 
கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.
காதல் திருமணம்
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய 
களத்திர ஸ்தானம் , களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் 
என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் 
அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது 
காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.
நல்ல காதலர்
ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச 
கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் 
சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க 
குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு 
இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் 
போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, 
சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக 
பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ 
ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே 
தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் 
அமைவார்.
காதலில் சொதப்புவது எது?
12ஆம் இடம் இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த 
இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் 
இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, 
தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச 
கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
வயதில் மூத்த காதலி
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் 
இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் 
வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை 
மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் 
வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் 
சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் 
இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் 
தொடர்பு உண்டாகும்
பெங்களூரு சிறையில் சசிக்கு இப்படியொரு அறையா!இதற்குத்தான் 
இவ்ளோ ஆட்டமோ...
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கு உச்சநீதிமன்றம் நான்கு 
ஆண்டு ஜெயில் தண்டனை  வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
வழங்கியதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறை தயார் 
நிலையில் உள்ளது.
அதே வேளையில் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது போன்ற சிறப்பு 
அறைகள் ஒதுக்கப்படமாட்டாது. சாதாரண சிறையில் 
அடைக்கப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காதலர் தினம். உலகமே கொண்டாடுகிறது. பரிசு பொருட்களையும் வாழ்த்துகளையும், அன்பு முத்தங்களையும் காதல் ஜோடிகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன.லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து 
வைத்தாலும் அதை போற்றி பாதுகாக்காமல் பாதியில் ரத்து செய்து விட்டு போகும் நிலையும் இன்றைக்கு இருக்கிறது. என்னதான் தேடித் தேடி திருமணம் செய்து வைத்தாலும் புரிதல் இல்லாத வாழ்க்கை மண வாழ்க்கையில் தம்பதிகளிடையே கசப்பை ஏற்படுத்துகிறது.இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை 
வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம்.ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே 
ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
குரு
ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.
சுக்கிரன்
இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான 
உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும்காரணமானவர்.
செவ்வாய்
இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.
புதன் - சந்திரன்
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.
விவகாரமான சனி-சந்திரன்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் 
வயப்படுத்துவது எளிது. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.
சுக்கிரன் - செவ்வாய்
ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. 
காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்களாம்.
காதலில் விழுவது யார்?
ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் 
இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம்
யார் பார்க்கலாம்
மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய தசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.
கற்பு நெறி தவறாத காதல்
இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி 
தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.
காதல் வாழ்க்கை சிறப்பு
ஏழாம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், 
நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.
காதல் திருமணம்
ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் , களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.
நல்ல காதலர்
ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் 
போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ 
ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.
காதலில் சொதப்புவது எது?
12ஆம் இடம் இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, 
தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
வயதில் மூத்த காதலி
ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை 
மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.

valentines day special
  14 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??