Home  |  சினிமா விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்!!

தில்லுக்கு துட்டு விமர்சனம்!!

தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு.

கதை

சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back.

பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் காதல். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் அந்த பங்களாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.அங்கு எதற்காக செல்கிறார்கள் பேய் இவர்களை என்ன செய்தது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த தில்லுக்கு துட்டு.

படத்தை பற்றிய அலசல்

இனிமே ஹீரோதான் என பட்டையை கிளப்பி வரும் சந்தானம், இப்படத்திலும் இவருக்கு சூட் ஆகும் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார், காமெடி டான்ஸ் ஃபைட் என எல்லா ஏரியாவிலும் பவுண்டரி விலாசுகிறார். ஷனாயா பார்க்க அழகாக இருக்கிறார் நடிப்பிலும் குறை சொல்லும் படி இல்லை.

காமெடி படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ராஜேந்திரனை புக் செய்து விடலாம் போலும் இப்படத்திலும் செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அப்லாஸ் அள்ளுகிறார்.நானும் ரௌடிதானுக்கு பிறகு ஆனந்த் ராஜிற்கு வெயிட்டான ரோல் அதிலும் காமெடி பண்ணரேன்னு நான் பழைய வில்லன்றத மறந்துறாத என சொல்லும் இடம் மாஸ்! இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும் கருனாஸும் தனித்து தெரியும் அளவில் சிரிப்பு காட்டுகிறார்.மாமனார் மருமகனாக வரும் சௌரப் ஷுக்லா, T M கார்த்திகின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

வாராவாரம் வரும் காமெடி பேய் படங்கள் இதுவும் ஒன்று என்றாலும் இதனின் பலமே எல்லா நகைச்சுவைகளுக்கும் ஆடியன்ஸிடம் இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ் வருகிறது.படத்தின் ஆரம்பத்தில் சீரியஸ் பேய் படம் போல ஆரம்பித்தாலும் பின்னர் காமெடி திரைக்கதை மூலம் சரவெடியை கொளுத்தி விடுகிறார் இயக்குனர் ராம்பாலா. படத்தின் எந்த கதாப்பாத்திரதிற்கு யார் பொருத்தம் என நல்ல casting அமைததும் படத்தின் பலம்.பின் இரண்டாம் பாதியின் ஆரம்பம் சற்று இழுவையாக அரம்பித்து பின் சுதாரித்து படம் நகர்கிறது.

ஆனால் படத்தில் ஹீரோ என்ன செய்கிறார், திபத்திய சாமியாருக்கு தமிழ் மிக எளிதாக வருவது, ஊரையே அடித்து போடும் உக்கிரமான பேய் இவர்களின் விளையாட்டில் பங்கேற்கிறது என பல லாஜிக் மீறல்களும் இருக்கதான் செய்கிறது.

தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தன் மகள் விரும்பும் காதலனை குடும்பத்தோடு வீட்டுக்கு வர சொல்லி அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு பாஸ்! என்னதான் இது பேய் படம் என்றாலும் இதில் பேய்கே guest role தான்.தமனின் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது, கார்த்திக் ராஜாவின் பிண்ணனி படத்திற்கு பலம் சேர்கிறார். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் மிகவும் colorful ஆகவும் இன்னொரு பக்கம் பேய் பங்களாவில் இருட்டிலும் திகில் காட்டுகிறது.

க்ளாப்ஸ்:

படத்தின் காமெடிக்கு பஞ்சமே இல்லை, அனைத்து நடிகர்களும் அவர்களின் பங்கை மிச சரியாக செய்துள்ளனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு பாரட்டத்தக்கது.

பல்ப்ஸ்:

முதல் பாதியை பார்க்கும் போது இரண்டாம் பாதி சற்று சுவாரஸ்யம் குறைவாக தோன்றுகிறது, தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். லாஜிக் மீறல்களிலும் சில க்ளீஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி குறைத்திருக்கலாம்.

thillukuthuttu review!!

 

Cast Santhanam, Shanaya, Saurabh Shukla, Motta Rajendran, Karunas, Anandraj
Direction Ram Bala
Music Thaman
Cinematography Deepak Kumar Pathy
Editing Gopi
Release Date 7th July 2016
Tamil audience have witnessed several horror comedy films in the recent past and the recent one in the list is Santhanam's Dhillukku Dhuttu. Though the comedian turned hero has given his best as a hero, this Dhillukku Dhuttu has nothing different when we compare it to a typical horror comedy film.Continue reading to know whether the film is worth a watch or not.
Plot:
The film opens with a story that happened in 1940, when a young woman kills herself (watch the film to know the reason) and her soul is still haunting that bangalow located in the top of a hill named Sivan Kondai Malai. Then the film returns to the present.Santhanam and Shanaya, who were once classmates in school, falls in love after meeting each other after so long time. But Shanaya's father who is not wishing to accept a poor guy as his son-in-law plans to kill Santhanam, and appoints Motta Rajendran to do that.He tactically takes Santhanam's family to that haunted bangalow (mentioned earlier). Rajendran uses some reel ghosts and makes several attempts to horrorize and kill Santhanam, but in vain.Then comes the real ghost, let out from a box? What will happen next? Watch in big screens.Performances:Santhanam has carried the complete film on his shoulders, despite his one liners were bit pesky.Heroine Shanaya is pretty in looks, but no so when it comes to acting and lip sync.Motta Rajendran, Karunas, Anandraj etc have done justice to their roles.What's hot and What is not:Thaman's songs were good, but some were a huge speed breakers. Cinematography by Deepak Kumar Pathy is colourful, and the work of Karthik Raja in background score is worth mentioning.On the whole, Dhillukku Dhuttu is a decent entertainer, and is watchable for the one-liners of Santhanam.

Cast Santhanam, Shanaya, Saurabh Shukla, Motta Rajendran, Karunas, Anandraj

Direction Ram Bala

Music Thaman

Cinematography Deepak Kumar Pathy

Editing Gopi

Release Date 7th July 2016

Tamil audience have witnessed several horror comedy films in the recent past and the recent one in the list is Santhanam's Dhillukku Dhuttu. Though the comedian turned hero has given his best as a hero, this Dhillukku Dhuttu has nothing different when we compare it to a typical horror comedy film.Continue reading to know whether the film is worth a watch or not.

Plot:

The film opens with a story that happened in 1940, when a young woman kills herself (watch the film to know the reason) and her soul is still haunting that bangalow located in the top of a hill named Sivan Kondai Malai. Then the film returns to the present.Santhanam and Shanaya, who were once classmates in school, falls in love after meeting each other after so long time. But Shanaya's father who is not wishing to accept a poor guy as his son-in-law plans to kill Santhanam, and appoints Motta Rajendran to do that.He tactically takes Santhanam's family to that haunted bangalow (mentioned earlier).

Rajendran uses some reel ghosts and makes several attempts to horrorize and kill Santhanam, but in vain.Then comes the real ghost, let out from a box? What will happen next? Watch in big screens.

Performances:

Santhanam has carried the complete film on his shoulders, despite his one liners were bit pesky.Heroine Shanaya is pretty in looks, but no so when it comes to acting and lip sync.Motta Rajendran, Karunas, Anandraj etc have done justice to their roles.

What's hot and What is not:

Thaman's songs were good, but some were a huge speed breakers. Cinematography by Deepak Kumar Pathy is colourful, and the work of Karthik Raja in background score is worth mentioning.On the whole, Dhillukku Dhuttu is a decent entertainer, and is watchable for the one-liners of Santhanam.

  13 Jul 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *