Home  |  மற்றவை

பன்னீர்செல்வத்தின் திடீர் துணிவுக்கு காரணம் இதுதானா...

தமிழக அரசியல் வரலாற்றில் ‘பணிவு’ என்ற வார்த்தைக்கு அடையாளமாக வாழ்ந்து காட்டியவர், தமிழகத்தின் ‘காபந்து’ முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். அவரைப் பற்றிப் பேசும் அவர் ஊர்க்காரர்கள், “அவர் அதிர்ந்து பேசி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். சிரித்த முகம் மாறாதவர். ‘பொதுவெளியில் மட்டுமல்ல, எல்லோரிடமும் பேசும்போதுகூட ‘மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா’ என்றுதான் பேசவே ஆரம்பிப்பார்.
அம்மா மீது அவர் வைத்திருந்த பக்தியைப் பார்த்து… நாங்கள் உள்ளுக்குள் சிரித்த காலகட்டத்தில்தான் நகரசபைத் தலைவராக இருந்தவருக்கு அம்மா, எம்.எல்.ஏ சீட் கொடுத்தார்கள். அடுத்து, அவரை மந்திரியாக்கினார்கள். அம்மாவுக்கு ஏற்பட்ட சோதனை காலகட்டத்தில் தன்னுடைய முதல்வர் நாற்காலியை ஓ.பி.எஸ்ஸுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
அம்மா ஒருமுறைதானே விட்டுக் கொடுக்கிறார் என்று நினைத்தோம். ஆனால், இரண்டாவது முறையும் ஓ.பி.எஸ்ஸுக்கு முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுத்தார். ஓ.பி.எஸ் கேட்காமலேயே அம்மா, பதவிகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அம்மாவே இரண்டுமுறை கொடுத்த முதல்வர் பதவி, இப்போது அம்மா இல்லாதபோதும் ஓ.பி.எஸ் இருக்கும் இடம் தேடிவந்திருக்கிறது. அந்தப் பதவியைத்தான் இப்போது ‘விட்டுக் கொடுக்கும்படி’ அம்மாவின் தோழி சசிகலா கேட்கிறார்.
முதல்வர் பதவியைக் திருப்பிக்கொடுக்க ஓ.பி.எஸ் மனப்பூர்வமாகவே தயார் நிலையில்தான் இருந்தார்… அதாவது, கடந்த நான்காம் தேதி மாலை வரை” என்றனர். ”அது என்ன நான்காம் தேதி மாலை வரை? அந்தத் தேதி இரவில் என்ன நடந்தது” என்றோம். “நான்காம் தேதி இரவு செல்போனில் ஓ.பி.எஸ்ஸை அழைத்தவர், ‘நாளைக்கு நீ எங்கேயும் கிளம்பி, குடும்பத்தோடு சுற்றப் போயிடாதே. கார்டனுக்கு வந்திடு’ என்று சொல்லியிருக்கிறார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஓ.பி.எஸ்ஸும் தன்னை ஒருமையில் அழைத்ததை வெளிக்காட்டாமலும், பணிவு குறையாமலும் பதிலைச் சொல்லியிருக்கிறார்.
‘தன் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டுதானே ஓ.பி.எஸ் இருந்தார்’ என்று சசிகலா பேட்டியில் சொல்கிறார். அது உண்மைதான், மனதைக் கல்லாக்கி வைத்துக்கொண்டுதான் ஓ.பி.எஸ் அன்று, அப்படி சிரித்துக்கொண்டிருந்தார்.
சட்டமன்றக் கட்சித்தலைவராக சசிகலா பெயரை ஓ.பி.எஸ் முன்மொழிந்தது வரைதான் அனைவருக்கும் தெரியும், அதற்கு முன்னால் என்ன நடந்தது என்று தெரியுமா? ‘சீக்கிரம் கையெழுத்துப் போடுங்க. நல்ல நேரம் போகுது’ என்று சசிகலா கேட்க, ‘நான் எந்த முடிவை எடுத்தாலும் அம்மாவைக் கேட்டுத்தான் செய்திருக்கிறேன். அம்மா சமாதிக்குப் போய்விட்டு வந்து கையெழுத்தைப் போடுகிறேனே’ என்று ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார்.
அப்போதுதான் ஓ.பி.எஸ்ஸுக்கு அந்த அவமதிப்பு நடந்திருக்கிறது. சசிகலாவின் உறவினரும் கார்டனில் ஃபவர் சென்டராக இருப்பவருமான ஒருவர், ‘முதலில் கையெழுத்தைப் போடு, அப்புறம் மெதுவா போய் உங்கம்மாவைப் பார்த்துச் சொல்லிட்டு வா’ என்றிருக்கிறார். ஓ.பி.எஸ்., அவமானமும் வருத்தமும் மேலிட நிமிர்ந்து பார்த்தபோது, ‘யோவ், போடுய்யா, என்னமோ பாக்குற’ என்று மீண்டும் எகிற… அமைதியாக கையெழுத்துப் போட்டுவிட்டுக் கண்ணில் நீர் துளிர்க்கக் கிளம்பி இருக்கிறார்.
போகும்போது, ‘சின்னம்மா, உங்கள் பெயரை எந்த வருத்தமும் இல்லாமல் இங்கு, நான் முன்மொழிகிறேன்… என்னைச் சில மந்திரிகளும், உங்களுடைய உறவினர்களும் தொடர்ந்து அசிங்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இடத்திலும் என்னை உங்கள் கண்முன்னே அவமானப்படுத்துகிறார் ஒருவர். அத்துடன், தலைமைக்கழகத்தில் கடந்த 29-ம் தேதி நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், எம்.எல்.ஏக்களோடு நான் அமரவைக்கப்பட்டேன். அதையும் சுட்டிக்காட்டி பல இடங்களில் கேலி பேசுகிறார்கள். போனில் அழைத்தும் தொடர்ந்து கேலி பேசுகிறார்கள். ‘இந்த முதல்வர் பதவி எப்போது கையைவிட்டுப் போகுமோ என்று அம்மாவை நானே பலமுறை வேண்டிக் கொண்டிருந்தேன்… இப்போது நீங்களாகவே கேட்டுக் கையைவிட்டுப் போகிறது’ என்று சொன்னார்,
ஓ.பி.எஸ். அவருடைய இந்தப் பதிலுக்குப் பின்னால் கார்டனில் பெரும் பிரளயமே வெடித்தது… ‘அப்படியென்றால், முதல்வர் பதவியை எனக்கு நீங்களாகப் பார்த்துவிட்டுக் கொடுக்கிறீர்களா’ என்று சசிகலா சத்தம் போட்டார். சசிகலாவின் உறவினர்களும் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். அத்தனையையும் மனதில் போட்டுக்கொண்டுதான் ஓ.பி.எஸ் அமைதியாக இருந்தார். அதன்பின்னர் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்றதோடு, சட்டமன்றக் கட்சித்தலைவராக சசிகலா பெயரையும் முன்மொழிந்தார்.
‘அன்று அம்மா சமாதிக்கு போகக் கிடைக்காத அனுமதியும், வாய்ப்பும் இனிமேல் யார் தயவும் இல்லாமல் எப்போதும் நான் போய்வரும்படி கிடைத்திருக்கிறது. அம்மா சமாதிக்குள் என்னை போகக் கூடாது என்று சொல்லும் சக்தி, இனி யாருக்கும் இல்லை… யார் அனுமதியும் அதற்கு இனி தேவையுமில்லை’ என்று சொல்லிவிட்டுத்தான் 7-ம் தேதி அம்மா சமாதிக்கு ஓ.பி.எஸ் வந்தார்… நாற்பது நிமிட வெட்டவெளி தியானத்திலும் ஆழ்ந்தார். மண்ணுக்குள் புதைந்துவிட்ட அம்மாவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டுதான் பேசவே ஆரம்பித்தார். இனி, அம்மாவின் உத்தரவுப்படி ஓ.பி.எஸ் அடிக்கடி பேசுவார், நிறையவே பேசுவார். ஓ.பி.எஸ் சொல்லாமல்விட்ட 90 சதவிகிதத்தில் இந்த விஷயமும் உண்டு” என்கின்றனர்.

ops
  10 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?
பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்: காயத்ரி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜூலி முடிவு ! என்ன நடந்தது?
மீண்டும் கதறிய ஜூலி
சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?
ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது!! கழுத்தை அன்மிக்கும் கயிறு…
எடப்பாடி வெற்றி செல்லாது!? சபை மரபு மீறப்பட்டுள்ளது! ஆட்சி கலைக்க கவர்னர் முடிவு ?
தன்மான சிங்கம் என கோசமிட்ட திமுகவினர்: கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்
மார்ச் 11 முதல் ‘ஜெயா டிவி’ வராது; மாவிஸ் சாட்காம் அறிவிப்பு
ஒருநாள் முதல்வரா எடப்பாடியார்?? நாளையுடன் out??