Home  |  சினிமா விமர்சனம்

காதலர்களை கவரும் இது நம்ம ஆளு விமர்சனம்!!

காதலர்களை கவரும் இது நம்ம ஆளு விமர்சனம்!!

கன்னித்தீவு கதை போல் ஒரு முடிவில்லாமல் நீண்ட வருடங்களாக சென்றது இது நம்ம ஆளு படப்பிடிப்பு. ஆனால், ஒரு வழியாக எல்லோரின் உழைப்பிற்கும் பலனாக இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது.தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என்பதை விட, பிரிந்த காதலர்கள் படத்தில் இணைந்தார்கள் என்று சிம்பு நயன்தாரா இப்படத்தில் நடிப்பதே பலரின் எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், இந்த எதிர்ப்பார்ப்பை இது நம்ம ஆளு பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.

கதைக்களம்

ஐடி பாய் சிவாவாக சிம்பு, அவருடைய சகோ சூரி ஆடம்பர வாழ்க்கையுடன் சந்தோஷமாக அரட்டை, கலாட்டா என செல்ல, சிம்புவிற்கு நயன்தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.அதன் பிறகு என்ன விடிய விடிய இன்றைய ட்ரண்ட் காதலர்கள் போல் போனில் கடலை, ஆரம்பத்தில் ஜாலியாக செல்ல, ஒரு கடத்தில் சிம்பு தன் X லவ்வர் கதையை ஓபன் செய்கிறார்.ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப். அதன் பிறகு நயன்தாரா சும்மா இருப்பாரா??? சிம்புடன் எது பேசினாலும் சண்டையில் முடிய ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணத்துல் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதை தொடர்ந்து சிம்பு யாரை கரம் பிடித்தார் என்பதை 2:15 மணி நேரம் செம்ம கலகலப்பாக கூறியுள்ளார் பாண்டிராஜ்.

படத்தை பற்றிய அலசல்

சிம்பு இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், அப்பாடா ஒரு வழியா விட்ட இடத்தை பிடித்துவிட்டார், தனக்கே உரிய துறுதுறு நடிப்பால் எல்லோருக்கும் பிடித்தது போல் கலக்கியுள்ளார். நயன்தாராவை காதலிக்கும் இடத்தில் ஓ இப்படி தான் சிம்பு லவ் பண்ணாரா என்று நமக்கே எண்ண தோன்றுகின்றது. அதிலும் எத்தனை பெரிய ஹீரோ செம்ம பல்ப் வாங்குகிறார் சூரியிடம் பல இடங்களில். மேலும் அவரே அவரை எனக்கு நடிக்க தெரியாதுங்க என்று சொல்லி கலாய்ப்பது எல்லாம் சூப்பர் சார். அனைத்திற்கு மேல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவிற்கு பெண் ரசிகைகள் இதில் அதிகமாவார்கள்.நயன்தாரா எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

முதலில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக இவர் நடிக்க சம்மதித்ததற்கே ஹேட்ஸ் ஆப். ஏனெனில் பல காட்சிகள் ரியல் லைப் சம்மந்தப்பட்டவை. நயன்தாரா நடிக்க கூட வேண்டாம், வந்தாலே போதும் என்ற மனநிலையில் இதில் செம்ம ட்ரீட் கொடுத்துள்ளார் ரசிகர்களுக்கு.சூரி எப்படிங்க ஐடி பாய், போங்க காமெடி பண்ணாதீங்கள் என்று கூறியவர்கள் வாய் அடைத்துவிட்டார்.

சிம்புவை பல இடங்களில் கவுண்டர் கொடுக்கும் கதாபாத்திரம், அவர் பேசும் போன் டாக்கிற்கு இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கின்றது. சந்தானம் கெஸ்ட் ரோல் தான் என்றாலும் கலக்கிவிடுகிறார். தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து. இதைவிட சிம்பு, நயன்தாராவையும் இத்தனை அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது. குரளரசன் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடிக்க, பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார். அதிலும் காதல் காட்சிகளுக்கு கொஞ்சம் மெனக்கெடுத்துள்ளார், பின்ன சிம்பு தம்பியாச்சே.

க்ளாப்ஸ்

சிம்பு-நயன் தாரா கெமிஸ்ட்ரி, பலரையும் பொறாமை பட வைக்கும். படம் முழுவதும் காதல் நிரம்பி வழிகிறது.சூரி ஐடி பாய் எப்படி சாத்தியம் என்றார்கள், படம் முழுவதும் தன் ஒன் லைன் காமெடியில் அதகளம் செய்துள்ளார். சிம்புவை கலாய்க்கும் இடத்திலும் சரி, நயன்தாரவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் இடத்திலும் சரி செம்ம அப்லாஸ் அள்ளுகிறார்.பாலசுப்ரமணியனின் கலர்புல் ஒளிப்பளிவு, இதையெல்லாம் விட வசனம்.பாண்டிராஜ் இதில் PHD முடித்திருப்பார் போல, வசனம் என்ற ஏரியாவில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மேலும் இத்தனை வருடம் கழித்து வந்தாலும் படம் ப்ரஸ்ஸாகவே உள்ளது.பிறகு அவ்வபோது படத்தில் வரும் சர்ப்ரைஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தில் கதை இல்லை என்று பாண்டிராஜ் முன்பே சொன்னாலும், கொஞ்சம் கதை என்று இருந்திருக்கலாம்.ஒரு சில கதாபாத்திரங்களை நம்பியே கதை நகருவது.மொத்தத்தில் இது நம்ம ஆளு ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சிம்பு இஸ் பேக், காதலர்களுக்கு ரசிகர்களுக்கும் இது நம்ம படம்.

ரேட்டிங் 3/5

Idhu Namma Aalu Review!!

 

Cast Simbu, Nayantara, Andrea, Soori, Jayaprakash
Direction Pandiraj
Music Kuralarasan
Cinematography Balasubramaniam
Release Date 27th May 2016
Simbu's long pending project Idhu Namma Aalu has finally released after a hiatus. Those who were eagerly waiting to watch Simbu and Nayantara on screen have got the moment finally. Continue reading to know whether the film impresses or not.Plot:Siva (Simbu) works as a project manager in a IT firm, and his father Jayaprakash wants him to have an arranged marriage with Myla(Nayantara). Simbu already has several breakups in the past, however he agrees to marry Nayan.Once Simbu was in relationship with Andrea (a good friend of Nayantara) which has ended in breakup. After several Myla on knowing the real reason behind their breakup agrees to marry him.All goes well until a fight broke up between their parents, and the marriage plans gets stalled. Will Simbu marry Nayantara? or this relationship too ends up. Watch the film to know the answer.What's hot and What is not?The whole film is filled with an essence of love, and we may definitely say Simbu is back on track after so long time. The first half is breezy and the expressions of Nayanthara, dialogues, screen presence of Simbu makes the movie a worthy watch.Soori's one liners were impressive, while Andrea attracts in the small role.On the other end, the second half is much boring with several unnecessary scenes, and that particular phone call will surely test the patience of the viewers.Cinematography by BalaSubranmaniam is worth mentioning to be exceptional. Meanwhile the music by Kuralarasan were good, but few songs comes as a speed breaker. The debuting composer has done a good job in the bgm.On the whole, Idhu Namma Aalu is watchable for the stellar onscreen chemistry of STR and Nayanthara, and the lovely dialogues by Pandiraj. But the director may have trimmed those long sequences, which will enhance the experience watching it.

Cast Simbu, Nayantara, Andrea, Soori, Jayaprakash

Direction Pandiraj

Music Kuralarasan

Cinematography Balasubramaniam

Release Date 27th May 2016

Simbu's long pending project Idhu Namma Aalu has finally released after a hiatus. Those who were eagerly waiting to watch Simbu and Nayantara on screen have got the moment finally. Continue reading to know whether the film impresses or not.

Plot:

Siva (Simbu) works as a project manager in a IT firm, and his father Jayaprakash wants him to have an arranged marriage with Myla(Nayantara). Simbu already has several breakups in the past, however he agrees to marry Nayan.Once Simbu was in relationship with Andrea (a good friend of Nayantara) which has ended in breakup. After several Myla on knowing the real reason behind their breakup agrees to marry him.All goes well until a fight broke up between their parents, and the marriage plans gets stalled. Will Simbu marry Nayantara? or this relationship too ends up. Watch the film to know the answer.

What's hot and What is not?

The whole film is filled with an essence of love, and we may definitely say Simbu is back on track after so long time. The first half is breezy and the expressions of Nayanthara, dialogues, screen presence of Simbu makes the movie a worthy watch.Soori's one liners were impressive, while Andrea attracts in the small role.On the other end, the second half is much boring with several unnecessary scenes, and that particular phone call will surely test the patience of the viewers.

Cinematography by BalaSubranmaniam is worth mentioning to be exceptional. Meanwhile the music by Kuralarasan were good, but few songs comes as a speed breaker. The debuting composer has done a good job in the bgm.On the whole, Idhu Namma Aalu is watchable for the stellar onscreen chemistry of STR and Nayanthara, and the lovely dialogues by Pandiraj. But the director may have trimmed those long sequences, which will enhance the experience watching it.

 

  13 Jul 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *