Home  |  சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…

சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…

சமந்தா என்பதை பந்தா என்று மாற்றிவிடலாம் என்கிற அளவுக்கு ஓவராக ஆட்டம் போடுகிறாராம்.

நாகார்ஜுனாவின் வீட்டுக்கு மருமகளாகப்போகிறோம் என்பதாலோ என்னவோ கடந்த சில மாதங்களாக சமந்தாவின் நடவடிக்கையில் அநியாயத்துக்கு மாற்றம்.

ஆரம்பகாலத்தில் படப்பிடிப்புக்கு வரும்போது அப்பா அம்மாவைக் கூட அழைக்காமல் டச்சப் பையனோடு வந்தவர், இப்போதெல்லாம் அரை டஜனுக்கும் மேற்பட்ட அடியாட்கள் புடைசூழத்தான் படப்பிடிப்புக்கே வருகிறார்.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சமந்தா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த சமந்தா, அடியாட்களுடன் வந்திறங்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அதைப் பார்த்த சிவகார்த்திகேயன் கடுப்பானாலும் அதை அவர் சமந்தாவிடம் காட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் அடுத்தநாளே இயக்குநர் பொன்ராமை அழைத்து  கண்டிஷன்களை போட்டிருக்கிறார் சமந்தா.

என்ன கண்டிஷன்?

அதற்கு முன்னதாக சின்னதாக ஒரு பின்கதை…

நீண்டகாலமாகவே சருமநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் சமந்தா.

சோரியாஸிஸ் என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா இதற்காக பல வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஆனாலும், சமந்தாவுக்கு சருமநோய் இன்னும் குணமாகவில்லை. குணமாகவும் வாய்ப்பில்லை.

காரணம்.. அவருக்கு ஏற்பட்டுள்ள சோரியாஸிஸ் என்ற நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் மேலும் மேலும் பரவாமல் தடுக்க மட்டுமே முடியும்.

இதற்கான சிகிச்சையைத்தான் சமந்தா எடுத்துக் கொண்டு வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவை தேடி வந்தது.

ஐ மற்றும் கடல் படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட சமந்தா பின்னர் இந்த சருமநோய் பிரச்சனை காரணமாக இரண்டு படங்களிலிருந்தும் விலகினார்.

அதன் பின்னர் அந்த நோயோடு வாழப்பழகிவிட்டார் சமந்தா.

இப்படியொரு சூழலில்தான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க தென்காசிக்கு வந்திறங்கினார்.

முதல்நாள் நார்மலாக இருந்தவர், அடுத்த நாளே பொன்ராமை அழைத்து, “வெயிலில் நின்று என்னால் நடிக்க முடியாது. வெயில் அதிகமாவதற்கு முன் என்னுடைய ஷாட்களை எடுத்துவிட வேண்டும்.. வெயில் குறைந்த பிறகுதான் நடிக்க வருவேன், வெயில் நேரடியாக என் மீது படாத அளவுக்கு துணியைக் கட்டி படப்பிடிப்பு நடத்த வேண்டும்’ – என்று கண்டிஷன்களை அடுக்கி இருக்கிறார்.

அவர் சொன்னதற்கு தலையாட்டிய இயக்குநர் பொன்ராம் வேறுவழியில்லாமல் அவர் சொன்னபடியே படப்பிடிப்பை நடத்தினாராம்.

இதனால் திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியவில்லையாம்.

சிவகார்த்திகேயன் அந்தப்படத்தின் ஹீரோ மட்டுமல்ல, தயாரிப்பாளரும் அவரேதான்.

சமந்தா போட்ட கண்ஷன்களால் படத்தின் பட்ஜெட் எகிறுவது கண்டு கடுப்பாகிவிட்டாராம்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்…”

என்று   பொன்ராமிடம்  சீறிய சிவகார்த்திகேயன் சமந்தாவின் வருங்கால கணவரை நினைத்தும் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினாராம்.

 

samantha vs sivakarthikeyan
  24 Jul 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?