Home  |  சினிமா செய்திகள்

ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.

30 நாட்களுக்கு முன்பு வரை ஓவியா என்றால் யார் என்று கேட்டவர்கள்தான் அதிகம்.
தமிழில் ஏறக்குறைய மார்க்கெட் இழந்த நடிகைதான் அவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவின் புகழ் விண்ணைத்தொட்டுவிட்டது.
ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை, ஓவியா பாசறைகள் என சமூகவலைத்தளங்களில் ஓவியா புராணம்தான்.
அது மட்டுமல்ல, அவர் உச்சரித்த ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க…’ என்பதை வைத்து பாடலும், டீ-ஷர்ட், பனியன்களும் கூட தயாராகிவிட்டன.
கெட்ட வார்த்தைக்கு மாற்றாக அவர் சொன்ன Fish Up வார்தையும் பனியன்களில் இடம்பெற ஆரம்பித்துவிட்டன.
தரமணி சினிமா விளம்பரத்தில் கூட.. Fish Up.
அந்தளவுக்கு ஓவர்நைட்டில் பிரபலமாகிவிட்டார் ‘பிக்பாஸ்’ ஓவியா.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவரது நேர்மையான, இயல்பான நடவடிக்கைகள் மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டன.
இன்னொரு பக்கம், காயத்ரி ரகுராம், சக்தி, ஜூலி, நமிதா ஆகியோர் ஓவியாவை தொடர்ந்து புறக்கணித்ததும், அவமானப்படுத்தியதும் ஓவியா மீது அனுதாபத்தை அள்ளிக் கொட்டிவிட்டது.
இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
மக்கள் மத்தியில் தனக்கு இத்தனை பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஓவியாவுக்கே தெரியாது(?).
இந்த உண்மைகள் எல்லாம் அவருக்குத் தெரிய இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேலாகலாம்.
அவர் வெளியே வந்ததும் தங்களின் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்று பல பேர் காத்திருக்கிறார்கள்.
அவரை தம் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் புகழை அறுவடை செய்ய பெருங்கூட்டமே காத்திருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே விஜய்சேதுபதியின் 25 ஆவது படமான ‘சீதக்காதி’யில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தாராம் ஓவியா.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை, அட்வான்ஸ் கொடுத்தல் போன்ற நகர்வுகள் இல்லாதநிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போய்விட்டார் ஓவியா.
அவர் வெளியே வருவதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், அவருக்குப்பதிலாக நடிகை பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஓவியாவுக்காக காத்திருந்து தன்னுடைய கால்ஷீட்டை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம் விஜய்சேதுபதி.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ புகழ் பாலாஜி தரணீதரன் இயக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மூன்றாவது கதாநாயகி வேடத்துக்குத்தான் ஓவியாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அந்த வேடத்தில்தான் தற்போது பார்வதி நாயர் நடிக்கவிருக்கிறார்.
ஒருவேளை பார்வதி நாயரை இவர்கள் கமிட் பண்ணவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டுக்குள்ளிருந்து வந்த பிறகு இந்தப் படத்தில் ஓவியா நடிப்பது சந்தேகம்தான்.
ஓவியாவின் ரேன்ஜ் வேற லெவலுக்குப் போய்விட்டதே.
யார் கண்டது? அடுத்த நயன்தாராவாகவும் ஓவியா இருக்கலாம்.
என்னது…. சான்ஸே இல்லை என்கிறீர்களா?
நீங்க ஷட்டப் பண்ணுங்க…

நீங்க ஷட்டப் பண்ணுங்க
  27 Jul 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
கால்ல சுளுக்கு... அதான் வரல!- இனியாவின் பதில் இது
என்கிட்ட முடியுமா ! ஏமி ஜாக்சன் ஆவேசம்
ஓவியாவின் புகழை அறுவடை செய்ய காத்திருக்கும் பெருங்கூட்டம்.
ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!!
கவர்ச்சி உடையில் சமந்தா : சைதன்யா ரசிகர்கள் கவலை
சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…
விஜய் சூர்யாவை மிஞ்சும் சிவகார்த்திகேயன்
‘விவேகம்’ டீஸரை விரட்டி விரட்டி கலாய்த்த விஜய் ரசிகர்கள்
ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா ? விஜய் மீது போலிஸில் புகார்
பாகுபலிக்கு பிரபாஸ் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?