Home  |  சினிமா விமர்சனம்

கதகளி திரைவிமர்சனம்!!!

கதகளி  திரைவிமர்சனம்!!!

‘பாயும் புலி’யில் பாய்ச்சலை தவறிய விஷால் தற்போது கதகளி ஆட வந்துள்ளார். நடிகர் சங்கம் + வெள்ள நிவாரண பணிகள் என பிஸியாக இருந்தும் ‘கதகளி’யை சொன்னப்படி சரியான நேரத்தில் கொடுத்துள்ளார். அவரின் ஆட்டம் எப்படி என்பதை பார்ப்போமா?


நடிகர்கள் : விஷால், கேத்ரீன் தெரசா, நாசர், சூரி, கருணாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்

படத்தொகுப்பு : பிரதீப் ராகவ்

இயக்கம் : பாண்டிராஜ்

தயாரிப்பாளர் : விஷால் + பாண்டிராஜ்

 

 

 

பசங்க-2 வெற்றி உற்சாகத்தில் பாண்டிராஜ், நடிசர் சங்க வெற்றியில் விஷால் இருவரும் இணைந்து படம் தான் கதகளி. ஆம்பள, பாயும் புலி படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என விஷால் மீண்டும் பாண்டியநாடு ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார்.

கதைக்களம்

கடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிர்கள் தான். எல்லோரிடமும் ஏதாவது வம்பு செய்வது என தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டே இருக்கின்றது.அதில் ஓர் கூரிய கத்தி தான் விஷால். விஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது.

ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடு செல்கிறார்.கேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார். தம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷால், விஷாலின் அண்ணன் மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் என பலரது மேல் சந்தேகம் எழுகிறது.போலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

படத்தை பற்றிய அலசல்

விஷால் ஆறடி இளைஞனாக கம்பீர தோற்றம், இன்னும் 50 பேரை அடித்தால் கூட நம்பலாம், ஆனால், ஸ்டண்ட் காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல் மிக யதார்த்தமாக கலக்குகிறார். தன் குடும்பத்திற்கு ஏதும் ஆக கூடாது என தவிக்கும் தருணம், தம்பாவை யார் கொன்றிருப்பார்கள் என பதட்டம் என பாண்டியநாடு விஷால் பேக்.கேத்ரின் வெறும் காதலிக்க மட்டும் தான், விஷாலின் நண்பராக வரும் கருணாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார், இடையில் நடிகர் சங்கத்தை எல்லாம் லைட்டாக அவரே கலாய்க்கிறார்.படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும், படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதை தான்.

பாண்டிராஜ் அடுத்து என்ன அடுத்து என்ன, டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட், அந்த டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட் என ஆடியன்ஸ் பல்ஸை எகிற வைக்கின்றார்.ஹிப்ஹாப் ஆதி இந்த முறை அனைவரையும் ஏமாற்றி விட்டார், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருந்தாலும், படத்தில் வரும் 2 பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும் இரண்டாம் பாதி முழுவதையும், அந்த இரவிற்குள் நம்மையும் பதட்ட பட வைக்கின்றது.

க்ளாப்ஸ்

கண்டிப்பாக இரண்டாம் பாதி தான், மிக நேர்த்தியான ஒரு ராவ்வான ஸ்கிரீன் ப்ளே. அந்த குடும்பத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என ஆடியன்ஸ் நெகங்களை கடிக்க வைத்ததிலேயே பாண்டிராஜ் பாஸ் மார்க் வாங்கி விட்டார்.

பல்ப்ஸ்

படம் ஆரம்பித்து கதைக்குள் செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் இழுக்கின்றது.மேலும், டுவிஸ்ட்டை கொஞ்சம் இடைவெளி விட்டு அவிழ்ந்திருந்தால் இன்னும் சுவாரசியம் நிறைந்திருக்கும், அடுத்தடுத்து உடனே டுவிஸ்ட்டை உடைப்பது, கொஞ்சம் யதார்த்ததை விலகி உள்ளது.மொத்தத்தில் விஷாலுக்கு வழக்கமான ஆக்‌ஷன் என்றாலும், பாண்டிராஜ் முதன் முறையாக ஆக்‌ஷன் களத்தில் இறங்கி கதகளி இல்லை ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

‘பாயும் புலி’யில் பாய்ச்சலை தவறிய விஷால் தற்போது கதகளி ஆட வந்துள்ளார். நடிகர் சங்கம் + வெள்ள நிவாரண பணிகள் என பிஸியாக இருந்தும் ‘கதகளி’யை சொன்னப்படி சரியான நேரத்தில் கொடுத்துள்ளார். அவரின் ஆட்டம் எப்படி என்பதை பார்ப்போமா?
நடிகர்கள் : விஷால், கேத்ரீன் தெரசா, நாசர், சூரி, கருணாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு : பிரதீப் ராகவ்
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பாளர் : விஷால் + பாண்டிராஜ்
விரைவில் விமர்சனத்துடன் சந்திக்கிறோம்…
  14 Jan 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *