Home  |  சினிமா செய்திகள்

"மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..?'' - பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் என்றாலே காமெடி ப்ளஸ் கலாட்டா எப்போதும் இருக்கும். திரைப்படங்களில் இவரது காமெடி கலாட்டா இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாகப் படங்களின் ஆடியோ வெளியீட்டில் இவரது காமெடி அதிகமாகவே காணப்படும். நடிகைகள் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைக்கூட பார்க்கலாம். ஆனால், பார்த்திபன் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்குப் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பேர் போனவர் இவர். சமீபத்தில் பார்த்திபன் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது விழாவில் கலந்துகொண்ட பலரையும் ரசிக்க மற்றும் சிரிக்க வைத்தது. மேலும், விஜய் ரசிகர்கள் பலரின் அப்ளாஸையும் வாங்கியது. 
mersal
ஆனால், பார்த்திபனின் இந்தப் பேச்சால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள், ’கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா, கொடுத்த காசுக்கு மேல கூவிட்டீங்க...’ என்று சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி துருவ நட்சத்திரம் படத்துக்காக ஜார்கண்ட் சென்றிருக்கும் பார்த்திபனிடம் பேசினோம்.
''எப்போதும் என்னை படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு பேச அழைப்பார்கள். நானும் கலந்துகொண்டு பேசுவேன். அப்படி பேசும்போது அதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்தபிறகும்கூட பலர் பெருமையாகப் பேசுவார்கள். 'மெர்சல்' ஆடியோ ஃபங்ஷன் அன்று எனக்கு இரவு ஃபிளைட் இருந்தது. அதனால் என்னை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வந்து 5 நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டுதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 
நிகழ்ச்சியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்போல் என்னைதான் முதலில் களத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் பேசுபவன் நானே சுவாரஸ்யம் இல்லாமல் பேசிவிட்டால் நிகழ்ச்சி கலையிழந்துவிடும். அதுமட்டுமின்றி, நம்மை ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்தால் அங்கிருப்பவர்களை மகிழ்விக்கும் விதமாகத்தான் நமது பேச்சும் இருக்க வேண்டும். அதனால்தான் நான் எல்லோரையும் சந்தோஷம் படுத்தும்விதமாகப் பேசினேன். என்னுடைய பேச்சை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்து மகிழ்ந்தார். 
பார்த்திபன்
எப்போதும் ஆடியோ லான்சில் கலந்துகொள்வதற்கு காசு எல்லாம் நான் வாங்கமாட்டேன். சில கல்லூரி விழாக்களில் பேசுவதற்குப் பணம் வாங்குவேன். அந்தப் பணத்தை எனது 'ஆர்.பார்த்திபன் மனிதநேய டிரஸ்ட்’காகச் செலவிடுவேன். இந்த டிரஸ்ட் என்னுடயது, அதற்காகப் பயன்படுத்துவேன். சமூக வலைதளங்களில் சிலர்  'மெர்சல்' ஆடியோ லான்ச் லான்சில் காசு வாங்கிவிட்டுப் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். இதுவரை ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக நான் பணம் வாங்கியதில்லை. இதன்பிறகு வாங்கலாம் என்று யோசிக்கிறேன். 
நான் விஜய் ரசிகன், அஜித் ரசிகனலாம் இல்லை. ஆனால், சினிமா ரசிகன். இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறோம் என்று முன்னாடியே யோசிப்பேன். ஆளப்போறான் தமிழன் பாட்டை பற்றிப் பேசலாம் என்றுதான் வந்தேன். ஏனென்றால், தமிழருவி மணியன் ‘பிறப்பால் தமிழர் இல்லாத சிலரும் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். இதை சொல்ல வேண்டும் என்றுதான் ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்தேன். அதை நான் அப்படியே சொல்லியிருந்தால் என் பேச்சை யாரும் ரசித்து இருக்கமாட்டார்கள். அதனால்தான் பல பன்ச் டயலாக்ஸ் எல்லாம் விட்டேன். அதையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.என்னைப் பொருத்தவரை தெலுங்கர், கன்னடர், மலையாளினு யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளட்டும். ஆனால், தமிழர் நன்றாகயிருக்க வேண்டும். விவசாயி வாழ வேண்டும். இளைஞர்களுக்கு நல்லது செய்யணும். அவ்வளவுதான். இதை நான் அப்படியே சொல்லியிருந்தால் யாரும் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் என்றாலே காமெடி ப்ளஸ் கலாட்டா எப்போதும் இருக்கும். திரைப்படங்களில் இவரது காமெடி கலாட்டா இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாகப் படங்களின் ஆடியோ வெளியீட்டில் இவரது காமெடி அதிகமாகவே காணப்படும். நடிகைகள் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைக்கூட பார்க்கலாம். ஆனால், பார்த்திபன் இல்லாத ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்குப் படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பேர் போனவர் இவர். சமீபத்தில் பார்த்திபன் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது விழாவில் கலந்துகொண்ட பலரையும் ரசிக்க மற்றும் சிரிக்க வைத்தது. மேலும், விஜய் ரசிகர்கள் பலரின் அப்ளாஸையும் வாங்கியது. 
mersal
ஆனால், பார்த்திபனின் இந்தப் பேச்சால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள், ’கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா, கொடுத்த காசுக்கு மேல கூவிட்டீங்க...’ என்று சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி துருவ நட்சத்திரம் படத்துக்காக ஜார்கண்ட் சென்றிருக்கும் பார்த்திபனிடம் பேசினோம்.
''எப்போதும் என்னை படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு பேச அழைப்பார்கள். நானும் கலந்துகொண்டு பேசுவேன். அப்படி பேசும்போது அதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்தபிறகும்கூட பலர் பெருமையாகப் பேசுவார்கள். 'மெர்சல்' ஆடியோ ஃபங்ஷன் அன்று எனக்கு இரவு ஃபிளைட் இருந்தது. அதனால் என்னை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வந்து 5 நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டுதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 
நிகழ்ச்சியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்போல் என்னைதான் முதலில் களத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் பேசுபவன் நானே சுவாரஸ்யம் இல்லாமல் பேசிவிட்டால் நிகழ்ச்சி கலையிழந்துவிடும். அதுமட்டுமின்றி, நம்மை ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்தால் அங்கிருப்பவர்களை மகிழ்விக்கும் விதமாகத்தான் நமது பேச்சும் இருக்க வேண்டும். அதனால்தான் நான் எல்லோரையும் சந்தோஷம் படுத்தும்விதமாகப் பேசினேன். என்னுடைய பேச்சை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்து மகிழ்ந்தார். 
பார்த்திபன்
எப்போதும் ஆடியோ லான்சில் கலந்துகொள்வதற்கு காசு எல்லாம் நான் வாங்கமாட்டேன். சில கல்லூரி விழாக்களில் பேசுவதற்குப் பணம் வாங்குவேன். அந்தப் பணத்தை எனது 'ஆர்.பார்த்திபன் மனிதநேய டிரஸ்ட்’காகச் செலவிடுவேன். இந்த டிரஸ்ட் என்னுடயது, அதற்காகப் பயன்படுத்துவேன். சமூக வலைதளங்களில் சிலர்  'மெர்சல்' ஆடியோ லான்ச் லான்சில் காசு வாங்கிவிட்டுப் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். இதுவரை ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக நான் பணம் வாங்கியதில்லை. இதன்பிறகு வாங்கலாம் என்று யோசிக்கிறேன். 
நான் விஜய் ரசிகன், அஜித் ரசிகனலாம் இல்லை. ஆனால், சினிமா ரசிகன். இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறோம் என்று முன்னாடியே யோசிப்பேன். ஆளப்போறான் தமிழன் பாட்டை பற்றிப் பேசலாம் என்றுதான் வந்தேன். ஏனென்றால், தமிழருவி மணியன் ‘பிறப்பால் தமிழர் இல்லாத சிலரும் தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார். இதை சொல்ல வேண்டும் என்றுதான் ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்தேன். அதை நான் அப்படியே சொல்லியிருந்தால் என் பேச்சை யாரும் ரசித்து இருக்கமாட்டார்கள். அதனால்தான் பல பன்ச் டயலாக்ஸ் எல்லாம் விட்டேன். அதையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.
என்னைப் பொருத்தவரை தெலுங்கர், கன்னடர், மலையாளினு யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளட்டும். ஆனால், தமிழர் நன்றாகயிருக்க வேண்டும். விவசாயி வாழ வேண்டும். இளைஞர்களுக்கு நல்லது செய்யணும். அவ்வளவுதான். இதை நான் அப்படியே சொல்லியிருந்தால் யாரும் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார் பார்த்திபன
  28 Aug 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காவல் துறையில் புகார்! வெளியேற்றப்பட்ட போட்டியாளர் அதிரடி - விரிவான தகவல்
மெர்ஸலுக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது !இதோ ரிசல்ட்
விவேகம் திரைப்படம் வசூலில் 4வது இடத்தை பிடித்தது! எங்கு தெரியுமா?
மெர்சல் சென்ஸார் பற்றி வந்த சிறப்பு தகவல்!!
பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிம்பு நுழைந்தாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா ஓவியா போல் நடிக்க முயற்ச்சி?
அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு கொண்டாட்டம் ரெடி ஆகிடுச்சு!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு சோதனையா??
பிந்து மாதவி கண்ணீர் விட்டு அழுகை !! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரி ?